ஊட்டி, அக். 28: ஊட்டிகலெக்டர் அலுவலகத்தில் ஊழலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் அனைத்துதுறை அலுவலர்கள் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.
ஒவ்வொரு வருடமும் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரமாக அக்டோபர் 27ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த உறுதிமொழியில், நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன்.
