ஊட்டி,அக். 28: ஊட்டி சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்தசஷ்டி நடக்கிறது. ஊட்டி லோயர் பஜார் சாலையில் உள்ள இந்த கோயில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாத சஷ்டியை முன்னிட்டு நடைபெறும் இந்த உற்சவம்,அறம், பக்தி, அன்பு ஆகியவற்றின் இணைப்பாக திகழ்கிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் கொடியேற்றத்துடன்கந்தசஷ்டி விழா தொடங்கியது.
இதனை தொடர்ந்து நாள் தோறும் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, ராஜ அலங்காரம் மற்றும் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. நேற்று மாலை முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று காலை முதலே கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது.
