கூடலூர்,செப்.24: கூடலூர் நகர் வழியாக செல்லும் மைசூரில் இருந்து கூடலூர், ஊட்டி, மேட்டுப்பாளையம் வழியாக செல்லும் நெடுஞ்சாலையில் கூடலூர் நகராட்சியின் தூய்மை பணியாளர்கள் கடந்த இரு தினங்களாக தூய்மை பணிகள் மேற்கொண்டனர். நகர் பகுதியில் சாலையில் நடுவே வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை ஒட்டி இருபுறமும் நிறைந்து சிறிய திட்டுகளாக காணப்பட்ட மண்ணை அகற்றினர்.சுங்கம் ரவுண்டானா முதல் பழைய பேருந்து நிலையம் சிக்னல் வரை சேர்ந்திருந்த மண் திட்டுகள் அகற்றப்பட்டன.அகற்றப்பட்ட மண், சாலை ஓரத்தில் உள்ள பள்ளங்களில் கொட்டி சமன்படுத்தப்பட்டது.
+
Advertisement