பாலக்காடு, செப். 23: பாலக்காடு தலைமைத் தபால் அலுவலகம் அருகே காராளர் தெருவைச் சேர்ந்த மக்களும், அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் அங்குள்ள கிணறு சீரமைக்கப்பட்டது. பாலக்காடு நகராட்சி மேம்பாட்டு செயற்குழு தலைவர் மினிகிருஷ்ணகுமார் சீரமைக்கப்பட்ட கிணற்றை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். வார்டு உறுப்பினர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். முன்னாள் வார்டு உறுப்பினர் பிரபாகரன், காராளர் தெரு சங்கத்தலைவர் சுரேந்திரன், ஜெ.எச்.ஐ.,யினரான சுரேஷ்,சதீஷ் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement