ஊட்டி, செப்.23: ஊட்டியில் பாஸ்ட் புட் கடையில் சிலிண்டர் வெடித்ததில் பெண்ணிற்கு லேசான காயம் ஏற்பட்டது.ஊட்டியில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் ஆரணி ஹவுஸ் நுழைவு வாயில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்து நடத்தி வருபவர் சந்திரசேகர். இவரது மனைவி மல்லிகா (60). நேற்று வழக்கம்போல் மாலை இந்த கடையில் சமையல் வேலையில் மல்லிகா மற்றும் சந்திரசேகர் ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக, சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது.
அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த ஐந்து சிலிண்டர்களில் இரண்டு சிலிண்டர்களில் தீப்பிடித்து மல மளமளவென கடை முழுவதும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் மல்லிகாவிற்கு லேசான காயம் ஏற்பட்டது. விவரம் அறிந்த பகுதிக்கு வந்த தீயணைப்புத் துறையினர் கடையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தின் காரணமாக கோத்தகிரி - ஊட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.