பாலக்காடு, ஆக. 19: கொழிஞ்சாம்பாறை அருகே பைக்கில் தந்தையுடன் பள்ளிக்கு சென்ற மாணவி, பஸ் சக்கரம் ஏறி பலியானார்.
பாலக்காடு மாவட்டம், கொழிஞ்சாம்பாறை அருகே பழனியார்பாளையத்தைச் சேர்ந்தவர் சபீர்அலி. இவரது மகள் நபீஷத் மிஸ்ரியா(7). இவர், கொழிஞ்சாம்பாறையில் உள்ள தனியார் பள்ளியில் 2வது வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை வழக்கம்போல் தந்தை சபீர்அலியுடன், பைக்கில் நபீஷத் மிஸ்ரியா வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் புறப்பட்டார். அப்போது, அத்திக்கோடு அருகே சாலையின் பள்ளத்தில் பைக் இறங்கியதில் நபீஷத் மிஸ்ரியா சாலையின் நடுவே தூக்கி வீசப்பட்டார். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ்சின் சக்கரம் மாணவி மீது ஏறியது.
இதில், சம்பவ இடத்திலேயே நபீஷத் மிஸ்ரியா பலியானார். அவரது தந்தை சபீர்அலிக்கு லேசான காயம் ஏற்பட்டது.