குன்னூர், ஆக.18: குன்னூரில் பலத்த காற்று காரணமாக சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் கார் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்தன. நீலகிரி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. சில சமயங்களில் லேசான வெயில் அடித்தாலும் மழையும், மேகமூட்டங்களும் தொடந்துள்ளது. அதேப்போல் பகல் நேரங்களில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இதனிடையே இரவு நேரங்களில் பலத்த காற்று வீசி வருகிறது.
இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை பகுதியில் நேற்று பலத்த காற்று வீசியதால் பாரஸ்டேல் செல்லும் சாலையில் மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் விழுந்த மரத்தால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் முன்பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது.