ஊட்டி, ஆக. 18: ஊட்டி அருகே மாயார் பகுதியில் பகல் நேரங்களில் உலா வரும் புலியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஊட்டி அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இக்காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. வெளி மண்டல வனப்பகுதியில் அமைந்துள்ள மாயார் கிராமத்தில் சுமார் ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். பலர் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மாயார் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி ஒன்று பகல் நேரத்திலேயே சாலை மற்றும் குடியிருப்பை ஒட்டிய பகுதிகளில் உலா வருகிறது.
அடிக்கடி மக்களின் கண்களிலும் தென்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் அவ்வழியாக ஜீப்பில் சுற்றுலா பயணிகள் சென்ற போது, சாலையை கடந்து சென்றுள்ளது.
இதனை ஜீப்பில் சென்றவர்கள் பார்த்து வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.