பவானி, டிச. 9: சித்தோடு அருகே பைக்கில் சென்ற வாலிபரிடம், கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். சித்தோட்டைச் சேர்ந்தவர் கார்த்தி (27). கூலித்தொழிலாளி. இவர் நேற்று வேலைக்கு சென்றுவிட்டு ஈரோடு-சத்தி ரோட்டில் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பவானி ரிங்ரோடு பிரிவு அருகே வந்தபோது, பைக்கை வழிமறித்த இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த கார்த்தி, அருகில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்துத் தருவதாக கூறியுள்ளார்.
+
Advertisement


