ஊட்டி, டிச. 7: ஊட்டி மத்திய பஸ்நிலையத்தில், அரசின் சாதனை மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆட்சி பொறுப்பேற்றவுடன், கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரத்தை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கினார்.
மேலும், 14 வகையான மளிகை தொகுப்புகள் ரேஷன் கடை மூலம் வழங்கப்பட்டது. முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற ஆணை பிறப்பிக்கப்பட்டது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டது.


