கோத்தகிரி, டிச.6: நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று இரவு ஒரு சில இடங்களில் மிதமான சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக கோத்தகிரி, குன்னூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து நேற்று காலை முதலே ஒரு சில இடங்களில் மிதமானது முதல் சாரல் மழை பெய்ததோடு மட்டுமல்லாமல் உதகை, குன்னூர், கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மலைப்பாதை மற்றும் நகர் பகுதிகளில் பனி மூட்டம் சூழ்ந்த குளிர் காலநிலை நிலவியது.
+
Advertisement

