Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரூ.1.40 கோடிக்கு பருத்தி ஏலம்

அந்தியூர், ஆக. 5: ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை வேளாண் விளைபொருட்களின் ஏல விற்பனை நடைபெறும். நேற்று நடந்த ஏலத்தில் பருத்தி பி.டி காட்டன் ரகம் 5 ஆயிரம் மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தது.

இது கிலோ ஒன்று குறைந்தபட்சம் ரூ.78.09 முதல் அதிகபட்சம் ரூ.80.90 வரை சுமார் ரூ.1 கோடியே 40 லட்சத்திற்கு ஏலம் போனது. பருத்தியை அந்தியூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அன்னூர், புளியம்பட்டி, கரூர் கொங்கணாபுரம், காங்கயம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆலை அதிபர்கள் இவற்றை வாங்கிச் சென்றனர்.