பந்தலூர், டிச. 2: நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே தாளூர் பகுதியில் செயல்பட்டு வரும் நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று முன்தினம் நீலகிரி கலைவிழா- 2025 நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 60க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது கலைத்திறன்களை வெளிப்படுத்தினர். இசை, ஓவியம், இலக்கியம், நடனம், தனி நடனம் உள்ளிட்ட திறன் போட்டிகள் நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது. கல்லூரி நிர்வாக இயக்குனர் மற்றும் செயலர் ராஷித் கஸ்ஸாலி வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு கல்வியுடன் கலை, இலக்கியம் ஆகியவை இன்றியமையாதவை ஆகும் மாணவர்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்த இதுபோன்ற விழாக்கள் உதவும் என்றார். விழாவில் கல்லூரி முதல்வர் பாலசண்முகதேவி, பேராசிரியர் மோகன்பாபு, வளாக மேலாளர் உமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

