கும்பகோணம், நவ. 6: கும்பகோணம் மாநகராட்சி, தாராசுரம் 34வது வார்டு செந்தமிழ் நகரில் புதிதாக பூங்கா அமைக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எம்எல்ஏ அன்பழகனிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்கா கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் பங்கேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் உள்ளூர் கணேசன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயரும், மாநகர திமுக செயலாளருமான சு.ப.தமிழழகன், மாநகராட்சி ஆணையர் லெட்சுமணன், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் குட்டி.தெட்சிணாமூர்த்தி, மாநகர அவைத்தலைவர் வாசுதேவன், துணை செயலாளர்கள் ப்ரியம் சசிதரன், செந்தாமரை, மண்டல குழு தலைவர்கள் மனோகரன், பாபு.நரசிம்மன், பகுதி செயலாளர்கள் செல்வராஜ், கல்யாணசுந்தரம், கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் அனந்தராமன், முருகன், சாகுல்ஹமீது, செல்வம், பழவத்தான்கட்டளை ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், மாநகர் நல அலுவலர் டாக்டர் திவ்யா, செயற்பொறியாளர் லோகநாதன், உதவி பொறியாளர்கள் மாதவராஜ், போஸ், ஒப்பந்ததாரர் பிரேம்நாத் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். எம்எல்ஏ அன்பழகன் திறந்து வைத்தார்
+
Advertisement


