அரூர், அக்.1: அரூர் அருகே பே.தாதம்பட்டி கிராமத்தில், அரூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ₹9.60 லட்சம் மதிப்பீட்டில், கிளை நூலக கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. புதிய கிளை நூலக கட்டிடத்தை சம்பத்குமார் எம்எல்ஏ தலைமையில், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் பசுபதி, அரூர் நகர செயலாளர் அறிவழகன், அசோகன், செண்பகம் சந்தோஷ், சிவன், ஜெயந்தி, ராஜா, பாரதிராஜா, சரவணன், அன்பு, சம்பத், செல்வம், ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
+
Advertisement