அம்பை, செப்.15:அம்பாசமுத்திரம் அருகே பள்ளிக்குச் சென்ற 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்டோ டிரைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வைராவிகுளம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான முருகானந்தம் (55) என்பவர் ஆட்டோவில் சென்ற 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் அவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, சிறுமியின் தாய் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் வனிதா, ஆட்டோ டிரைவர் முருகானந்தம் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டம் (போக்சோ), பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.