களக்காடு, செப்.15: மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள சின்னமூலக்கரையை சேர்ந்தவர் லெட்சுமணன் (33). இவர் சொந்தமாக மாருதி வேன் வைத்து ஓட்டி வருகிறார். லெட்சுமணன் தனது வீட்டு முன் வேனை நிறுத்தியிருந்தார். அப்போது பதிவெண்கள் இல்லாத 2 பைக்குகளில் வந்த அதே ஊரைச் சேர்ந்த கொம்பையா மகன் ஆறுமுகம், பூல்பாண்டி மகன் முத்துக்குமார் மற்றும் 2 பேர் உள்பட 4 பேர் மாருதி வேனின் கண்ணாடிகளை உடைத்தனர். அதுபோல அதே ஊரைச் சேர்ந்த பூர்ணபாண்டியின் வீட்டு கதவையும் அவர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் மூலைக்கரைப்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ஆறுமுகம் உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.
+
Advertisement