நெல்லை, ஜூன் 19: நெல்லை கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று 19ம்தேதி நடப்பதாக கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் அறிக்கையில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை குறித்து மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் இன்று (19ம் தேதி) காலை 9.30 மணிக்கு நெல்லை கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடக்கிறது. மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் சிறப்புரை ஆற்றுகிறார். மாவட்ட அவை தலைவர் கிரகாம்பெல் தலைமையில் தொகுதி பார்வையாளர்கள் சுரேஷ்ராஜன், ஜோசப்ராஜ், சிவராஜ் ஆகியோர் முன்னிலையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட திமுக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயலாளர் தவறாது கலந்து ெகாண்டு தங்களின் கருத்துக்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement