தேசிய மாம்பழ தினத்தை தஞ்சையில் அரசு திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது
தஞ்சாவூர், ஜூலை 23: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பாராளுமன்ற மற்றும் சட்டமறை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரைத்த பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்து தொடர்புடைய இதர துறைகள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் செய்யப்பட்டது. மேலும், ஷியாமாபிரசாத் முகர்ஜி திட்டத்தில் திருமலை சமுத்திரம் தொகுப்பில் உள்ள 9 ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை. பொது சுகாதாரத்துறை, ஆவின் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.