Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

10ம் வகுப்பு தேர்வில் நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி

ஈரோடு, மே 19: ஈரோடு நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் வெற்றி பெற்று 100 சதவீதம் தேர்ச்சியை அடைந்தனர். தேர்வு எழுதியவர்களில் 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று ஹெச்.அப்சர் அலி மற்றும் ஏ.வி.உவைஸ் அப்துல் காதர் ஆகியோர் முதலிடமும், 488 மதிப்பெண்கள் பெற்று கனுவர்சன் இரண்டாமிடமும், 485 மதிப்பெண்கள் பெற்று காவ்யபாரதி மூன்றாமிடமும் பிடித்தனர். தேர்வு எழுதியவர்களில், 480 மதிப்பெண்களுக்கு மேல் 8 மாணவர்களும், 470 மதிப்பெண்களுக்கு மேல் 13 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 32 மாணவர்களும் பெற்றனர். கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 4 மாணவர்கள் 100க்கு100 மதிப்பெண்கள் பெற்றனர்.

வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களையும், பயிற்சியளித்த ஆசிரியர்களையும் தி கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி டிரஸ்டின் தலைவர் டாக்டர் குமாரசுவாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர்,மற்றும் உறுப்பினர்கள், பள்ளியின் தாளாளர் தேவராஜா, முதல்வர் கே.மைதிலி ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.