Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2 நாட்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம்

நாமக்கல், அக்.31: நாமக்கல் மாவட்டத்தில், தாயுமானவர் திட்டத்தின் மூலம், முதியவர்களின் வீடு தேடிச் சென்று 2 நாட்கள் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம், ரேஷன் கடைகள் மூலம், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று, அத்தியாவசிய பொருட்கள், வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே, முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இதனை பயன் படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.