நாமக்கல், செப்.30: நாமக்கல்லில் சர்வதேச கூட்டுறவு ஆண்டையொட்டி, மாவட்ட கூட்டுறவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் முழு கண் பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அருளரசு தலைமை வகித்தார். மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் கண் பரிசோதனை செய்து கொண்டனர். துணை பதிவாளர் செல்வி, சரக துணை பதிவாளர் ஜேசுதாஸ், திருச்செங்கோடு சரக துணை பதிவாளர் கிருஷ்ணன், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் தருணிகா, விஷ்ணுபிரியா, ஷோபனா, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை பணியாளர்கள், நாமக்கல் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக பணியாளர்கள், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு சரக துணைப்பதிவாளர் அலுவலக பணியாளர்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement