சேந்தமங்கலம், ஆக.30: கொல்லிமலை அடிவாரத்தில் ஆற்றங்கரையில் செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன், டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். சேந்தமங்கலம் ஒன்றியம், கொல்லிமலை அடிவாரப் பகுதியான நடுக்கேம்பை ஊராட்சி பாண்டியாறு கரையில் உள்ள செம்மண்ணை, மர்ம நபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் வெட்டி கடத்திக் கொண்டிருந்தனர். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை பார்த்த மர்ம நபர்கள் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். போலீசார் பொக்லைன், டிராக்டரை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement