நாமக்கல், ஆக.30: நாமக்கல் அருகே உள்ள கருப்பட்டிபாளையம் யாழ்நகரை சேர்ந்தவர் பிரசன்னா (45). இவர் முதலைப்பட்டியில் ஜூஸ் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம், தனது குடும்பத்தினருடன் உடுமலைப்பேட்டைக்கு உறவினர் வீட்டிற்கு சென்றார். பிரசன்னாவின் பெற்றோர் வீட்டின் மாடியில் வசிக்கிறார்கள். அவர்கள் நேற்று காலை, கீழே வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், உள்ளே சென்று பார்த்த போது, 2 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.இது குறித்து தகவலறிந்த பிரசன்னா, நேற்று மதியம் ஊருக்கு வந்தார். இது பற்றி நல்லிபாளையம் போலீசில் புகாரளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.
+
Advertisement