மல்லசமுத்திரம், ஆக.30: சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள காளிப்பட்டி கந்தசாமி கோயிலில், நேற்று ஆவணி வளர்பிறை சஷ்டி திதியை முன்னிட்டு, மூலவர் கந்தசாமிக்கு 16 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் தீபாரதனை நடந்தது. கோயில் உட்பிரகாரத்தில் வள்ளி-தெய்வானையுடன் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
+
Advertisement