குமாரபாளையம், அக்.29: தேசிய மருத்துவர் உதவியாளர் தினத்தை முன்னிட்டு, குமாரபாளையம் அன்னை சம்பூரணி அம்மாள் கல்வி நிறுவனங்கள் சார்பில் மருத்துவ தையல் தொழில்நுட்பம்- விஷமுறிவு சிகிச்சை தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஜேகேகே முனிராஜா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் வசந்தகுமாரி முனிராஜா குத்துவிளக்கேற்றி வைத்தார். மருத்துவர்கள் சிவா, அருண்குமார், ராஜ்கணேஷ் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு முதலுதவி, அவசர சிகிச்சை, மருத்துவ தையல் தொழில்நுட்பம், விஷமுறிவு சிகிச்சை தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளித்தனர். நிகழ்ச்சியில் முதல்வர் ஹரிராஜன், பேராசிரியர் நேதாஜி, விரிவுரையாளர் லிகேதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
+
Advertisement


