பரமத்திவேலூர், ஆக.29: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ.17.80 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு (கொப்பரை) ஏலம் போனது. பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, உலர்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 8 ஆயிரத்து 73 கிலோ கொப்பரை கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சம் கிலோ ரூ. 223.30க்கும், குறைந்தபட்சம் ரூ.216.88க்கும், சராசரியாக ரூ.220.61க்கும் ஏலம் போனது. 2ம் தர கொப்பரை அதிக பட்சம் கிலோ ரூ.215.60க்கும், குறைந்த பட்சம் கிலோ ரூ.168.88க்கும், சராசரியாக கிலோ ரூ.213.69க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ.17.80 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.
+
Advertisement