நாமகிரிப்பேட்டை, நவ.27: நாமகிரிப்பேட்டை வட்டாரத்துக்கு உட்பட்ட கார்கூடல்பட்டி மற்றும் கப்பலூத்து கிராமங்களில் அட்மா திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த கூட்டு பண்ணையம் என்ற தலைப்பில், விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) கவிதா பயிற்சியில் வேளாண்மை துறை திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். துணை வேளாண்மை அலுவலர் ராமசாமி வேளாண்மை துறையில் அரசின் திட்டங்கள், மானியம், இடுபொருட்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். ஈஷா நர்சரி பிரிவு மேலாளர் ராஜா, மண்புழு உரம் தயாரிப்பு, தேன் பெட்டி பராமரிப்பு, ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போன்றவை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். வட்டார தொழில்நுட்ப மேலா ளர் தரன், விதை நேர்த்தி செய்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். மேலும், உழவன் செயலி பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் விக்னேஷ், வர்ஷா, உதவி வேளாண்மை அலுவலர் சஞ்சய் ஆகியோர் செய்திருந்தனர்.
+
Advertisement


