மல்லசமுத்திரம், செப்.27: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் வாரம்தோறும் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில் காளிப்பட்டி, அம்மாபட்டி, செண்பகமாதேவி, பள்ளக்குழி, கரட்டுவளவு, மானுவங்காட்டுபாளையம், பள்ளிப்பட்டி, கொளங்கொண்டை, பருத்திப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் 60கிலோ எடையுள்ள, 23மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், முதல் தரம் கிலோவிற்கு ரூ.196.45 முதல் ரூ.223.75 வரையிலும், 2ம் தரம் ரூ.131.00 முதல் ரூ.143.00 வரையிலும் என மொத்தம் ரூ.1.62லட்சத்திற்கு ஏலம் போனது. அடுத்த ஏலம் வரும் 3ம் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
+
Advertisement