ராசிபுரம், செப். 27: ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் ஜானகி ராமன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஏற்கனவே கடன் வாங்கி செலுத்திய வியாபாரிகளுக்கு 2ம் கட்ட கடனுதவி வழங்கப்பட்டது. மேலும், அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. முகாமில் வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டு, கடனுதவிக்கான ஆவணங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் பட்டணம் பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
+
Advertisement