திருச்செங்கோடு, ஆக.27: திருச்செங்கோடு அருகே உஞ்சனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில், சக்திநாயக்கன்பாளையம் ரேஷன் கடை குமாரமங்கலம் முனியப்பன் கோயில் அருகில் செயல்பட்டு வருகிறது. இதில் 800க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. கடந்த நான்கு நாட்களாக பணியாளர் விடுமுறை எடுத்ததால் கடை திறக்கப்படாமல் பொதுமக்கள் பொருட்கள் பெற முடியாமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் நிலையில் ரேஷன் கடையில் பொருட்கள் பெற முடியாமல், கடந்த 4 நாட்களாக தவித்து வருகின்றனர். விடுமுறை எடுத்த நிலையில் தற்காலிக பணியாளர் நியமிக்காமல், பண்டிகை காலத்தில் இதுபோல் விடுமுறை எடுத்திருப்பது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
+
Advertisement