திருச்செங்கோடு, செப்.26: திருச்செங்கோடு அங்காளம்மன் கோயிலில் நவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிம்மவாஹினி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். நவராத்திரி விழாவையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரம் செய்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். திருச்செங்கோடு அருகே சத்திநாயக்கன்பாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் நவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. தினசரி அம்மனுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது. நேற்று சிம்மவாஹினி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். முன்னதாக சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். அனைவருக்கும் அனனதானம் வழங்கப்பட்டது.
+
Advertisement