நாமக்கல், செப்.26:ஊரக வளர்ச்சித்துறையில் காலி பணியிடங்களை நிரப்பிடக்கோரி நாமக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்றனர். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பால விநாயகம் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள 1500 பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்டட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
+
Advertisement