குமாரபாளையம், செப்.26: பச்சாம்பாளைத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் 340 முதலீட்டாளர்களை கொண்ட புதிய உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைக்கப்படுகிறது. அதற்கான முதலீட்டாளர்கள் கூட்டம் நடைபெற்றது. குமாரபாளையத்தில் இரண்டு ஜவுளி பூங்காக்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் பச்சாம்பாளையம் பகுதியில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய ஜவுளி பூங்கா அமைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் ரூ.150 கோடி செலவில் 340 முதலீட்டாளர்களை கொண்ட இந்த புதிய பூங்காவின் முதலீட்டாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பூங்காவின் நிர்வாக இயக்குனர் பழனிசாமி வரவேற்று பேசினார். பல்லடம் உயர் தொழில்நுட்ப பூங்கா இயக்குனர் ராஜ்குமார் தலைமை தாங்கி பேசினார். மேக்ரோ பிராஜக்ட் நிர்வாக இயக்குனர் ஜெயமோகன், இன்ஜினியர் ராஜ்குமார் மகேந்திரன் ஆகியோர் பூங்காவின் அமைப்பு, கட்டடங்கள், இடவசதிகள், இயந்திரங்கள், ஜவுளி உற்பத்தி, விற்பனை வசதிகள் குறித்து பேசினர். புதிய பூங்காவான டெக்ஸ் மவுண்ட் மாலின் துணைத்தலைவர் செல்வம் நன்றி கூறினார்.
+
Advertisement