நாமக்கல், அக்.25: நாமக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி அலுவலர்கள் அகற்றினார்கள். நாமக்கல் கோட்டை ரோடு உழவர் சந்தை எதிரே செல்லும் பொய்யேரி கரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டது. மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ரவீந்திரன் தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள், சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினார்கள். மேலும், விதிமுறை மீறி சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளின் கூரைகள், மற்றும் சிறிய அளவிலான சுவர்களும் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. நாமக்கல் மாநகராட்சி சாலைகளில் பல இடங்களில் மாநகராட்சியின் அனுமதியின்றி, போக்குவரத்துக்கு இடையூராக வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களும் அப்போது அகற்றப்பட்டது.
+
Advertisement
