பள்ளிபாளையம், செப். 25: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரேணுகாதேவி(48). இவரது மகன் மனிஷ்குமார்(28). இவர்கள் கடந்த 20 வருடங்களாக, வெப்படையை அடுத்துள்ள ஆத்திகாட்டூரில் தங்கியுள்ளனர். ரேணுகாதேவி மளிகை கடை வைத்துள்ளார். மனிஷ்குமார் பீகாரில் உள்ள தொழிலாளர்களை வரவழைத்து, பள்ளிபாளையம் பகுதியில் உள்ள நூற்பு ஆலைகள், சாயப்பட்டறைகள், ஆட்டோலூம் ஆலைகளில் வேலைக்கு அமர்த்தி வந்தார். இவர்களின் மளிகை கடையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக வெப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசாருடன் விரைந்த இன்ஸ்பெக்டர், ரேணுகாதேவியின் மளிகை கடையை சோதனையிட்டனர். இதில் 16கிலோ குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மணிஷ்குமார், பீகாரிலிருந்து வெப்படைக்கு வேலை தேடி வரும் தொழிலாளர்கள் மூலம், பீகாரிலிந்து குட்கா பொருள்களை கடத்தி வந்து பதுக்கி வைத்து, இங்குள்ள தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தாய், மகன் இருவரையும் கைது செய்து, குட்காவை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement