நாமக்கல், செப். 25: நாமக்கல் கங்காநகரை சேர்ந்தவர் அருள்முருகன் (47). இவர் கொடிக்கால்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது காரில் எருமபட்டிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நாமக்கல்லுக்கு வந்து சொண்டிருந்தார். தூசூர் ஏரிக்கரை பகுதியில் கார் வந்த போது, காரின் முன்புறம் இருந்து புகை வருவதை பார்த்து காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஓடினார். அதற்குள் தீ மளமளவென கார் முழுவதும் பரவி எரிந்தது. இது பற்றி அவர் நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று காரில் பரவிய தீயை தண்ணீரை பீச்சியடித்து அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் தீயில் எரிந்து சேதமானது. இது குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement