சேந்தமங்கலம், செப். 25: சேந்தமங்கலம் அடுத்த முத்துகாபட்டி மேதர்மாதேவி பகுதியை சேர்ந்தவர் விஜி. இவரது மனைவி விஜயலட்சுமி, வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் தனபால் (51), விவசாயி. இவரது மகன் யுவராஜ் (20), கடந்த சில நாட்களுக்கு முன்பு, விஜயலட்சுமி குடும்பத்தினருக்கும், தனபால் குடும்பத்தினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் தனபால், அவரது மகன் யுவராஜ் இருவரும் சேர்ந்து, விஜயலட்சுமியை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீஸ் எஸ்ஐ தமிழ்குமரன் வழக்குப்பதிவு செய்து, தனபால், யுவராஜ் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
+
Advertisement