பள்ளிபாளையம், அக்.24: பள்ளிபாளையம் ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளிலும், இந்த ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ், 1 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக தட்டாங்குட்டை, எலந்தகுட்டை, கொக்கராயன்பேட்டை, ஓடப்பள்ளி, காடச்சநல்லூர், களியனூர், களியனூர் அக்ரஹாரம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், பல்லக்கா பாளையம், புதுப்பாளையம், சமயசங்கிலி, பாப்பம்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் 3,593 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் தலைமையில், தாசில்தார் பிரகாஷ் மரக்கன்றுகளை நட்டு பணிகளை துவக்கி வைத்தார். அட்மா திட்ட குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, செல்வம், இளங்கோவன், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


