நாமக்கல், செப்.24:நாமக்கல்லில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், நாமக்கல் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் துணைத்தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு, நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. சிஐடியூ மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, மண்டல செயலாளர் தனபால் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். போராட்டத்தில் ஈடுபட்ட 90 பேரை போலீசார் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
+
Advertisement