நாமக்கல், செப்.23: திருச்செங்கோட்டில், கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே அணிமூர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அப்போது, கள்ளச்சாராயம் விற்றதாக அணிமூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி(43), சின்னப்பன்காடு தங்கவேல்(72) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 லிட்டர் சாராயம் மற்றும் 60 லிட்டர் ஊறல், ஒரு ஸ்கூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்பி விமலா கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இதன்பேரில், கலெக்டர் துர்காமூர்த்தி, இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதற்கான உத்தரவினை சிறையில் உள்ள சுப்பிரமணி, தங்கவேல் ஆகியோரிடம் போலீசார் வழங்கினர்.
+
Advertisement