நாமக்கல், செப்.23: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புதுச்சத்திரம் ஒன்றியம் எஸ்.உடுப்பம் ஊராட்சி பி.கொசவம்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் சக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு முன் தகர சீட் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. ஆனால், சிலர் வருவாய்த்துறை ஆவணங்களில் இல்லாத பாதையை இருப்பது போல தோற்றத்தை ஏற்படுத்தி பணியை தடுத்து நிறுத்தி விட்டனர். மேலும், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
+
Advertisement