நாமக்கல், ஆக.23: நாமக்கல் மாநகராட்சி 37வது வார்டு பெரியப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், உங்aகளுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில், முகாமில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வசதித்துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட 15 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜேஸ்குமார் எம்பி முகாமை பார்வையிட்டார். பின்னர், பொதுமக்கள் அளித்த மனுக்களில் தீர்வு காணப்பட்ட 50 மனுக்களுக்கு, உடனடியாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முகாமில், மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், தாசில்தார் மோகன்ராஜ், உதவி கலெக்டர் பிரபாகரன், கூட்டுறவாளர் ராணாஆனந்த், மாமன்ற உறுப்பினர் லட்சுமி, இளைஞர் அணி அமைப்பாளர் சதீஸ், வார்டு செயலாளர் மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement