சேந்தமங்கலம், செப்.22: நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே திருமலைப்பட்டி காந்தி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி(40). விவசாயியான இவரது மனைவி ராணி(37). இவர்களது மகள் ஜோதியை திருமலைப்பட்டி வரதராசு மகன் சின்ராசுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஜோதி பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.
இந்நிலையில், சின்ராசு தனது மனைவியை குடும்பம் நடத்த அனுப்புமாறு கேட்டுள்ளார். இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சின்ராசு வீட்டிலிருந்த அரிவாள்மனையை எடுத்து, ராணியை வெட்டி விட்டு. இதுகுறித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து நேற்று சின்ராசுவை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.