பள்ளிபாளையம், ஆக.22: பள்ளிபாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்று வந்த 5 கடைகளை, சீல் வைத்த உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ரூ.1.25 லட்சம் அபராதம் விதித்தனர். பள்ளிபாளையம் வட்டாரத்தில் ரங்கனூர், மேட்டுக்கடை, காடச்சநல்லூர் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் உள்ள மளிகை, பேக்கரி, டீக்கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரெங்கநாதன் நேற்று சோதனையிட்டார். இதில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. 5 கடைகளில் சோதனையிட்ட அதிகாரிகள் 20 கிலோ புகையிலை பொருட்களை கைப்பற்றினர். விற்பனை செய்வது முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டதால், கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1.25 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும், மாவட்ட வழங்கல் அதிகாரி தங்கவிக்னேஷ் உத்தரவின் பேரில், 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
+
Advertisement