நாமக்கல், நவ.21: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே விசுவாம்பாள் சமுத்திரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (45). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 12ம் தேதி, நாமக்கல் - பரமத்திரோட்டில் உள்ள கணேஷ் என்பவரின் பட்டறையில் பழுதுபார்க்க தனது லாரியை செந்தில்குமார் நிறுத்தினார். பட்டறையில் போதுமான இடவசதி இல்லாததால், பட்டறைக்கு அருகில் உள்ள காலி நிலத்தில் நிறுத்தி விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டார். பின்னர், கடந்த 17ம் தேதி வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. திருட்டு போன தனது லாரியை மீட்டு தரும்படி, நல்லிபாளையம் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
+
Advertisement


