ராசிபுரம், ஆக.21:ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் தலைமையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.7000 அபராதம் விதித்தனர். இந்நிகழ்ச்சியில் தூய்மை அலுவலர் செல்வராஜ், ஆய்வாளர் கோவிந்தராஜன் மற்றும் தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement