நாமக்கல், ஆக. 20: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சத்திர பிரதேச குழு மாநாடு நாமக்கல் அருகே ஏளூரில் நடைபெற்றது. சங்கத் தலைவர் கோமதி தலைமை வகித்தார். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படுவதைத் தடுக்க பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தை அரசு பலப்படுத்த வேண்டும். பணி செய்யும் இடங்களில், உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். 100 நாள் வேலையளிப்புத் திட்டத்தில், அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். வரதட்சணை கொடுமையால் உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாதர் சங்க நிர்வாகிகள் தனம், ராணி, சசிகலா, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement