ராசிபுரம், ஆக.20: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பட்டணம் பேரூராட்சி பகுதியில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பட்டா பெயர் மாற்றம், மின்சார சேவை, இ சேவை, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். இதில் மின் இணைப்பு பெயர் மாற்றம், பட்டா பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கப்பட்டது. மற்ற மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், பட்டணம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜானகிராமன், பேரூராட்சி தலைவர் போதையம்மாள், துணைத்தலைவர் நல்லதம்பி மற்றும் வருவாய்த்துறையினர், மின்சார வாரியத் துறையினர், பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement