திருச்செங்கோடு, நவ.19: திருச்செங்கோடு தாலுகா, இறையமங்கலம் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் (எ) இளைய பெருமாள் சுவாமி கோவிலில் விஷ்ணு புண்யகால சிறப்பு யாகம் நடைபெற்றது. மலைமீது வீற்றிருக்கும் இளையபெருமாள் கோயிலில் அருள்பாலிக்கும் கருடாழ்வாருக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர், திருமஞ்சனம், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இளையபெருமாளுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் விஷ்ணு புண்யகால பூஜைகள் நடைபெற்றது. இளையபெருமாள், கருடாழ்வாரை திரளான பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
+
Advertisement


